winsea

Tuesday, August 29, 2006

VIDUTHALAI 4


VIDUTHALAI 4


அவன் மொழியை துறந்ததன் பின்னணியில் பல உருக்கமான, இறுக்கமான காட்ச்சிகள் கடந்து சென்றுள்ளன. தமிழ்தான் அவனுடய தாய்மொழி ஆனால் அவனின் கல்வி ஆங்கிலவழியாகவே இருந்தது. தமிழைவிட ஆங்கிலம் அவன் நாவில் சாரளமாக குடிகொண்டிருந்தது. அவனுடய நட்பு வட்டாரமும் அப்படியே இருந்தது.
அவனின் கல்லூரி வாழ்க்கை, உற்சாகமும் உல்லாசமுமாக, குறும்பும் கூத்துமாக தடையில்லா காற்றைப் போல் சென்றது. அவன் மாபெரும் செல்வந்தரின் ஒரே மகன் என்பதால் அப்படியொரு வாழ்க்கை சாத்தியமாயிற்று. கல்லூரியில் எப்போதும் ஐந்து ஆறு பேர் கொண்ட கூட்டத்துடன் திரிந்தன்.
உலகில் எந்த ஒரு நிகழ்வும் அவனையும் அவன் நட்பு வட்டாரத்தையும் பாதித்தது இல்லை. தமிழகம் முழுவதும் பந்த் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. முதன் முதலில் அவன் அறிந்து கொண்ட, பங்கெடுத்துக்கொண்ட இந்த நிகழ்வுதான் அவனின் மொழி துறவுக்கு புள்ளி வைத்தது...

Thursday, August 24, 2006

அழகான பெண்களை


அழகான
பெண்களை
கண்டபோதெல்லாம்
வாடினேன்...
-வேன்

Monday, August 21, 2006

VIDUTHALAI 3


VIDUTHALAI 3

இவர்களுக்கு மத்தியில்...
முற்றிலும் துறந்தவன் என சொல்லிக்கொண்டு காவி உடையில் பாலும், பழமும் உண்டு கொழுத்து, உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்ககளைப் போல் அல்லாமல், உண்மையிலேயே முற்றும் துறந்த ஒருவன் இடப்பக்கமாக செல்ல வேண்டிய சாலையில் வலப்பக்கமாக சென்று கொண்டிருந்தான்.
காலைப் பொழுதின் ஒளி வெள்ளத்தில், அவன் துறவறத்தை கண்ட அனைவரும், ச்சீசீ...,கடவுளே..., சிவசிவா... என முனங்கியவரே கண்களை முடிக்கொண்டு கடந்து சென்றனர். இருந்தும் திரும்பி பார்க்காமல் செல்லவில்லை.
சுமார் இருப்த்தி மூன்று வயது மதிக்கதக்கவனாக இருந்தான் அந்த ஆடைகளை இழந்த துறவி. இளமையும், புஜ பலமும் அவன் நிர்வணத்தை துறவா இல்லை திமிரா? என கேள்விக்குறி ஆக்கின.
நிர்வாண மனிதனால் போக்குவரத்து சற்று சீர்குலைந்து போனடது. வாகனங்கள் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்ள சாலை எங்கும் களேபரமானது. போக்குவரத்து காவலர்கள் எரிச்சலின் உச்சத்துக்கே போனார்கள். சில நிமிடங்களில் செய்தி காவதுறையின் உயர் அதிகாரிக்ளை சென்றடைந்தது. அதிரடியாக நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டன.
எதுவும் இல்லாதவனைப் பார்த்து நம்மை ஏதாவது செய்து விடப்போகிறான், என்று அவனை நெருங்க யாரும் முன்வரவில்லை. விலகி வேடிக்கைப் பார்த்தவரே, சிலர் அவனை பின் தொடர்ந்தனர்.
அவனை நோக்கி ஓர் காவல் வாகனம் சீறிவந்து முன் நின்றது. வண்டியிலிருந்து நான்கு காவலர்கள் வேகமாக குதித்து, அவ ன் மேல் போர்வை போர்த்தி அப்படியே இழுத்து வண்டியில் ஏற்றினார்கள்.
யாருடா நீ? பிடித்தவர்கள், பிடிபட்டவனை பார்த்து கேட்கும் முதல் கேள்வி. அவனிடமும் அதுவே கேட்கப்பட்டது உள்ளிருந்த உயர் அதிகாரியால். பதில் இல்லை, இருந்தும் பெயர் என்ன, வயசு என்ன, அப்பா அம்மா பேரு என்னடா? என அடுக்கடுக்கான கேள்விகள்... அத்தனைக்கும் பதில் கூறாமல் மெளானியாய் இருந்தான். காரண்ம் அவன் ஆடைகளை மட்டுமல்ல மொழியையும் துறந்திருந்தன்...

Thursday, August 17, 2006

VIDUTHALA 2


VIDUTHALA 2
ஒவ்வொரு ஆறாவது அறிவு பிறக்கும் போது அழிவு என்ற கர்ப்பம் தரித்தே பிறக்கிறது. கர்ப்பத்தில் உள்ள கரு பிறப்பில் அழகாக தோன்றினாலும் அதன் உருவம் மெல்ல மெல்ல அரக்க உருவத்தயே அடைகிறது. முதலில் அதனிடத்தில் அன்பு, பண்பு, வளமை, இனிமை என எல்லாம் இருக்கும். சில கால இடைவெளியிலேயே அது அரக்கனாக மாறி, புயல் காற்றில் பறவும் தீயைப் போல் திசை எங்கும் சீறிப் பாய்ந்து மனித குலத்தோடு போர் தோடுக்கும்.
சீறும் வாகனங்கள், வண்ணங்களாலும் வடிவங்களாலும் கம்பீரமான கட்டிடங்கள், தேவைகளைக் கூறும் அலங்கார அறிவிப்பு பலகைகள், பளபளக்கும் சாலை, சாலையை இரண்டாக பிரிக்கும் பசுமை பூங்காக்கள் என ஆறாவது அறிவு பூத்துக் குளுங்கும் ஒரு மாநகரின் பிரதான சாலை, காலை வேளையில் இயந்திரகதியாய் இயங்கிக் கொண்டிருந்தது. சாலையில் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் சிந்தனை அலைகளிலும், ஆசை மனங்களிலும் பயணித்துக் கொண்டிருக்க
இவர்களுக்கு மத்தியில்...

Wednesday, August 16, 2006

VIDUTHALAI 1


VIDUTHALAI 1

எது ஆறாவது அறிவு?

விலங்கிடமிருந்து மனிதைனை பிரித்துக்கட்டும் அந்த

அறிவின் உருவம் என்ன? செயல் என்ன?

மனிதர்கள் ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமையல் அடித்துக்கொள்ளும்

அந்த செயலா? அவ்வாறு அடித்துக்கொள்ளும் போது மனித உடம்பிலிருந்து

சிதறி தரையில் வழிந்தோடும் இரத்தமா... அதன் உருவம்?...

மனிதனின் ஆறாவது அறிவுக்கு செயல் ஒன்றில்லை, உருவம் ஒன்றில்லை.

கணக்கில் அடங்காத செயல்களும், கண்ணுக்கே புலப்படாத உருவங்களும்

ஒவ்வொரு மைக்ரொ வினாடியிலும் கோடிக்கணக்கில் மனிதனிடமிருந்து

பிறந்து இறந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆறாவது அறிவு பிறக்கும் போதும...

Friday, August 11, 2006

VIDUTHALAI from SIXTH SENSEமனித மிருகங்களுக்கு வணக்கம்,

என்ன ரெம்ப அதிர்ச்சியா இருக்கா, மனிதன் மிருக இனத்தை சேர்ந்தவன்
என்பதை மறந்தே போய் விட்டீர்கள். அந்த உண்மையை உரைக்க சொல்லத்தான் VIDUTHALAI from SIXTH SENSE என்ற என் முதல் எழுதுப் பயணம்.